கோலி அனைத்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும்! பாகிஸ்தான்
இந்திய அணிக்காக பேட்டிங்கில் சாதிக்க விராட் கோலி, அனைத்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலக வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சாகித் அப்ரிடி, ரோகித் சர்மாவை இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கும் பிசிசிஐ-யின் முடிவு சரியான முடிவு.
நான் ரோகித்துடன் விளையாடி இருக்கிறேன், அவர் நல்ல மனநிலையுடன் இருக்கும் அற்புதமான வீரர்.
அவரிடம் இருக்கும் பெரிய விஷயமே, தேவையான நேரத்தில் அமைதியாக இருப்பார், தேவையான இடத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவார்.
ரோகித் ஒரு சிறப்பான கேப்டன் என்பதை ஐபிஎல் தொடர் மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.
அணி வீரர்களை வழிநடத்தும் தலைமை மனோபவாம் ரோகித்திடம் இருக்கிறது.
அதேசமயம், டி20 கேப்டன் பதவியிலிருந்து கோலி விலகுவார் என நான் எதிர்பார்த்தேன்.
இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி அற்புதமான சக்தியாக இருக்கிறார், ஆனால் அவர் அனைத்து கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.
கோலி ஒரு சிறப்பான பேட்ஸ்மேன், அவர் அனைத்து கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகி, எந்தவித அழுத்தமின்றி சுதந்திரமாக பேட்டிங் செய்தால் நாட்டிற்காக நிறைய சாதிக்கலாம் என அப்ரிடி தெரிவித்துள்ளார்.