ஒன்றுமேயில்லை:ராஜபக்சர்கள் வருகின்றனர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடந்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார். இந்நிலையில், அத்திட்டத்துக்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்வதற்கே, இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடந்துள்ளது.
வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வரவு- செலவுத்திட்டம் நிறைவடையும் வரையிலும், வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டாமென ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொழும்புக்கு வெளியே இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூடுமானவரையில், கொழும்பில் தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.