காரைநகரிலும் கவிழ்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி !
ககாரைநகர் பிரதேசசபையின் ஆட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இழந்துள்ளது. இன்று நடைபெற்ற புதிய தவிசாளர் தெரிவில், சுயேட்சைக்குழு உறுப்பினர் தவிசாளராக தெரிவானார்.
காரைநகர் பிரதேசசபை தவிசாளர் காலமானதை தொடர்ந்து, ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, இன்று தவிசாளர் தெரிவிற்கான விசேட சபை அமர்வு நடந்தது. வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தலைமையில் அமர்வு இடம்பெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தவிசாளர் வேட்பாளராக, உபதவிசாளர் பாலச்சந்திரன் நியமிக்கப்பட்ட போதும், அவரை ஏனைய கட்சிகள் யாரும் ஆதரிக்கவில்லை. சுயேட்சைக்குழு சார்பில் போட்டியிட்ட மயிலன் அப்புத்துரை வெற்றிபெற்றார்.
அவருக்கு ஆதரவாக 5 வாக்குகள் அளிக்கப்பட்டன.சுயேட்சைக்குழுவின் 3 வாக்குகளும், ஈ.பி.டி.பியின் 2 வாக்குகளும் அவருக்கு ஆதரவாக அளிக்கப்பட்டன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார். ஐ.தே.கவின் 2 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் சமூகமளிக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அங்கு 3 உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.