November 22, 2024

 ஆண்ட்ராய்டு போனை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எளிய வழிகள்!

உங்கள் ஆண்ட்ராய்டு போனை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் எளிய வழிகள்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் எளிய வழிமுறைகள் குறித்து காண்போம்.

லாக்

ஸ்மார்ட்போனை பாதுகாப்பாக வைத்திருக்க முதலில் லாக் போட்டு வைத்திருப்பது அவசியமாகும். உதாரணமாக, உங்கள் மொபைலை நீங்கள் தொலைத்துவிட்டால் அல்லது யாராவது அதை திருடிவிட்டால், நீங்கள் லாக் போட்டிருந்தால் உங்கள் போனை திறக்க அவர்களுக்கு கணிசமான அளவு நேரம் எடுக்கும்.

இது உங்கள் கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிக் கணக்கு தகவல்கள் திருடு போவதை தடுக்க உதவும், மேலும் உங்கள் சாதனத்தைக் கண்காணிக்கவும் துணை புரிகிறது.

ஆண்டி வைரஸ்

ஆண்டி- வைரஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்துவது உங்கள் ஸ்மார்ட்போனில் Android security பிரச்னைகளை கவனித்து சரி செய்ய உதவுகிறது. Avast Mobile Security & Antivirus and Norton Mobile Security போன்ற சாஃப்ட்வேர்கள் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.

ஆப்ஸ் பதிவிறக்கம்

உங்களிடம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இருந்தால் நம்பகமான தளங்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் மற்றும் கேம்களை டவுன்லோடு செய்வது அவசியம். கூகுள் ப்ளே ஸ்டோர் என்பது ஆண்ட்ராய்டு ஃபோன்களுக்கான ஆப் ஸ்டோர் ஆகும், இதிலிருந்து டவுன்லோடு செய்யலாம்.

ஆனால் நம்பத்தகாத மூன்றாம் தரப்பு இணையதளங்கள் மற்றும் ஆப் ஸ்டோர்களில் இருந்து ஆப்ஸ்களை டவுன்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் ஹேக்கர்கள் உங்கள் போனில் ஆப்ஸ்களுடன் வைரஸ்களை அனுப்பி உங்கள் போனை கண்காணிக்க, தகவல்களை திருட வாய்ப்புகள் உள்ளது.

பாஸ்வேர்ட் சேமிக்க வேண்டாம்

வழக்கமாக பெரும்பாலானோர் தங்களது ஸ்மார்ட்போனில் பாஸ்வோர்டுகளை சேமிக்கும் பழக்கத்தை வைத்துள்ளோம். குறிப்பாக தினமும் பயன்படுத்தும் அப்ஸ்களில் பாஸ்வோர்டுகளை சேமிக்கும் அம்சத்தை ஆன் செய்து வைத்திருப்போம். இதனால் எளிதாக உள்நுழைந்து பயன்படுத்த முடியும்.

கூடுதலாக, நீங்கள் பாஸ்வோர்டுகள் மறந்துவிட்டால் அதை கண்டுபிடிப்பதில் நேரம் செவழிக்க விரும்பமின்றி இதனை செய்வோம். ஆனால் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோனைப் பாதுகாக்க பாஸ்வோர்டுகளை சேவ் பண்ணி வைப்பதை தவிர்த்து விடுவது நல்லது.