November 21, 2024

அடுத்த 9 மாதங்களுக்கு இந்தியாவி ல் யார் யாருடன் விளையாடப் போகின்றார்கள் வெளியான தகவல்!

இந்தியா அடுத்த 9 மாதங்களுக்கு யார் யாருடன் விளையாடப் போகிறது தெரியுமா? வெளியான தகவல்!

உலகக்கோப்பை டி20 தொடரில் இருந்து வெளியேறிய இந்திய அணி, அடுத்த ஒன்பது மாதங்களுக்கு எந்தெந்த அணிகளுடன் விளையாடவுள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை டி20 ஆட்டத்தில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்தணி லீக் சுற்றோடு வெளியேறி, இந்திய ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில், இந்திய அணி அடுத்த 9 மாதங்களுக்கு விளையாடவுள்ள தொடர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அதன் படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி நவம்பர் 17-ஆம் திகதி முதல் இந்திய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதன் பின் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 25-ஆம் திகதி துவங்கி, டிசம்பர் 7-ஆம் திகதி முடிவடைகிறது.

இதையடுத்து தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி, டிசமர் 12 முதல் 21-ஆம் திகதி வரை மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதன் பின் 2022-ஆம் ஆண்டு ஜனவரி 11-ஆம் திகதி முதல் 16-ஆம் திகதி வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், அதன் பின் ஜனவரி 19, 21, 23 ஆகிய திகதிகளில் 3 டி20 போட்டிகளும், நடைபெறவுள்ளது.

இந்த தொடர் முடிந்த பின்பு, மேற்கிந்திய தீவு அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் பிப்ரவரி 6-ஆம் திகதி முதல் 20-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான தொடர் பிப்ரவரி 25 முதல் மார்ச் 18-ஆம் திகதி முடிவடைகிறது. இலங்கை தொடர் முடிந்த கையோடு, ஏப்ரல், மே மாதங்களில் 15-வது ஐபிஎல் சீசன் துவங்கிவிடும்.

இது முடிந்த பின்பு தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடுகிறது. சென்னையில் ஜூன் 9-ஆம் திகதி முதல் 17-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு இந்த ஆண்டு டெஸ்ட் தொடரில் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதால், அந்த கடைசி டெஸ்ட் போட்டியையும் அதைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.

இதில் டெஸ்ட் போட்டி ஜுலை 1-ஆம் திகதியும், முதல் டி20 போட்டி ஜுலை 7-ஆம் திகதியும், 12ஆம் திகதி லண்டனில் முதல் ஒருநாள் ஆட்டமும், 14-ஆம் திகதி லண்டனில் 2-வது ஒருநாள் ஆட்டமும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.