November 22, 2024

யேர்மனியில் தொடருந்துக்குள் கத்திக்குத்து!! மூவர் படுகாயம்!!

யேர்மனியின் தெற்குப் பகுதியில் அதிவேக தொடருந்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பவேரியாவில் உள்ள ரெஜென்ஸ்பர்க் மற்றும் நியூரம்பெர்க் நகரங்களுக்கு இடையே பயணித்த தொடருந்தில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதல் நடத்திய சிறிது நேரத்திலேயே தாக்குதலாளியான 27 வயதுடைய சிரிய நாட்டவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

எனினும் தாக்குதலுக்கான நோக்கம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

படுகாயங்களுக்கு உள்ளானவர்களின் உயிர்களுகளுக்கு ஆபத்து இருப்பதாகத் தெரியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து பல நூறு பயணிகள் தொடருந்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அந்த நபர் கைது செய்யப்பட்டதும், நியூரம்பெர்க்கிற்கு தெற்கே சுமார் 70கிமீ (43மீ) தொலைவில் உள்ள சோபடோர்வ் (Seubersdorf) தொடருந்து நிலையத்தில் குறித்த தொடருந்து நிறுத்தப்பட்டது.

யேர்மன் செய்தித்தாள் பில்ட் (Bild) இல் கைது செய்யப்பட்ட நபர் 2014 இல் யேர்மனிக்குள் நுழைந்தார் என்றும் குறித்த நபர் உளவியல் பிரச்சனைகளால் அவதிப்பட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.