November 22, 2024

இலங்கை வரவு செலவு திட்டம்:மிச்சம் மீதி ஏதுமில்லை!

அரச வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான வரிகளை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மேலும் குறைவடையும் என தெரியவருகின்றது.

அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இவ்வருட வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நிவாரணம் வழங்காது மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதேவேளை சமர்ப்பிக்கப்படவுள்ள 2022 ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நன்மைகளும்   வழங்கப்பட மாட்டாது என  அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். .

ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு நன்மைகள் உண்டு. ஆனால் 2022 இல் இது சாத்தியமில்லை. வழமையான செலவுகள் தொடரும், மேலும் எங்களால் கூடுதலானவற்றை ஒதுக்க முடியும், ஆனால் மக்களுக்கு நன்மைகள் மற்றும் மானியங்களைப் பொறுத்தவரை  அது சாத்தியமில்லை  என்றார்.

முன்பு புதிய வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது, ​​ஒரு நபரின் சம்பளத்தை அதிகரிப்பது போல், மக்கள் எப்போதும் „பரிசை“ „எதிர்பார்ப்பார்கள்“ என்று அவர் மேலும் குறிப்பிட்டார், ஆனால் அதை  இப்போதும் வழங்க முடியாது