März 29, 2025

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து  கிடைக்கவிருக்கும் 500 மில்லியன் டொலர்கள்

உலக வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கியுள்ளது. விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் சவாலை எதிர் கொள்ளல் உள்ளிட்ட செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக உலக வங்கி இந்நிதியுதவி வழங்கியுள்ளது.

நேற்று நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் நிதியமைச்சர் ஆட்டிகல(Atticala) கைச்சாத்திட்டுள்ளதுடன், உலக வங்கி சார்பில் தெற்காசியாவிற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஹாக்பர்(Hardwick Shocker) கைச்சாத்திட்டுள்ளார்.

இலங்கையில் தடையற்ற மற்றும் பாதுகாப்பான சாலை வலையமைப்பு அவசியம் எனவும் அளவிடப்பட்ட வீதி முதலீடுகள் இலங்கையின் நிலையான சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என மேலும் ஹார்ட்விக் ஷாக்பர்(Hardwick Shocker) குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தெற்காசியாவில் வீதி விபத்து உயிரிழப்புக்களில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. பிரதான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தாலும், மாகாண பிரிவுகளில் உள்ள வீதிகளில் 67 சதவீதமும், கிராமபுறங்களில் 13 சதவீதமான வீதிகளும் இதுவரையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் வீதி விபத்தினால் வருடத்திற்கு சுமார் 3 ஆயிரம் மரணங்கள் பதிவாகுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

அளவிடப்பட்ட வீதி முதலீடுகள் இலங்கையின் மனித மூலதனத்தை துரிதப்படுத்தும், அது நிலையான மற்றும் சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்

கிடைக்கப் பெற்ற நிதியுதவியை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் செயற்திட்டம் அரசாங்கத்தின் தேசிய அபிவிருத்தி மூலோபாயத்தின் முக்கிய முயற்சியான 1 இலட்சம் கிராமிய வீதி அபிவிருத்திக்க வலுச் சேர்க்கும்.

இச் செயற்திட்டம் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சினால் செயற்படுத்தப்படும். திட்ட மேற்பார்வை தொடர்பில் தேசிய வழிநடத்தல் குழு நியமிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.