போராட்டத்திற்கு மத்தியிலும் மோடி கோத்தபாய சந்திப்பு
கிளாஸ்கோ பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்தில் கோத்தபாய ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். மேலும், இந்த சந்திப்பு குறித்து படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்தியப் பிரதமர் மோடி.கிளாஸ்கோ உச்சி மாநாடு பல்வேறு உலகத் தலைவர்களுடன் உரையாட ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குவதாகப் பதிவிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்து தமிழர்கள் கோத்தபாய ராஜபக்சேவுக்கு போர்க்குற்றங்களுக்கு எதிராகப் அவர் தங்கியிருந்து விடுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளிவல் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றிருந்தது.
பின்னர் முற்பகல் 11 மணியளவில் கிளாஸ்கோ பருவநிலை மாநாடு நடைபெறும் இடத்தில் கோத்தபாயவுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் நடைபெற்றிருந்தது.
இந்நிலையில் இந்தியப் பிரதமர் மோடி கோத்தபாய ராஜபக்சேவை சந்தித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.