வடக்கிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம்!
தெற்கில் அரசிற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வரும் ஐக்கிய மக்கள் சக்தி வடக்கிலும் தனது போராட்டங்களை ஆரம்பித்துள்ளது.
வடக்கு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் ஆகியோர், ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை செவ்வாய்க்கிழமை (02) மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள் எனவும் அரசாங்கத்தால் உர இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதோடு கால்நடைகளுக்கான தீவனம் பெறுவதில் இடர்பாடு காணப்படுவதனால், விவசாயிகள் கால்நடை வளர்ப்போர், பண்ணையாளர்கள் பெரும் இடரை எதிர்நோக்கி வருகின்றார்கள் .
இந்நிலையில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீதி கோரி, நாளை செவ்வாய்க்கிழமை, வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால், கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே போராட்டத்தில் பங்கெடுக்க தென்னிலங்கையிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரவுள்ளனர்.