November 22, 2024

பங்காளிகளிற்கு அல்வா!

பொதுஜனபெரமுன உட்கட்சி மோதல் கூர்மையடைந்துள்ள நிலையில் வாசுதேவ நாணயக்கார ,  விமல் வீரவன்ச, உதய கம்பன்பில ஆகியோரை அமைச்சு பதவியிலிருந்து நீக்க  சதிகள் ஆரம்பமாகியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்,  அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

அமைச்சரவை தீர்மானத்தை பகிரங்கமாக விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி வந்தவுடன் விளக்கமளிக்க குழு தயாராகி வருகிறது. அதற்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அரசாங்கத்தை விமர்சிக்காமல் அமைச்சுப் பதவியை துறந்துவிட்டு வெளியேறி  சமூகத்தில் எதனையும் கூற வேண்டும் என   பின்வரிசை உறுப்பினர்கள் ஏற்கனவே பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர்.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்தல் உட்பட டுNபு கொடுக்கல் வாங்கல்களுக்கு எதிராக 11 அரசாங்கக் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் கடந்த 29ஆம் திகதி பிட்டகோட்டேயில் மக்கள் பேரவை கூட்டப்பட்டு அரசாங்கத்தை இவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கருத்து வெளியிடுகையில்,  அரசாங்கத்தை விமர்சிக்க முதுகெலும்பு இருந்தால் அரசாங்க பதவிகளை இராஜினாமா செய்து அரசாங்கத்தை விமர்சிக்குமாறு கோருவதாக தெரிவித்துள்ளார்.