März 28, 2025

மக்கள் வங்கி: தள்ளாடுகின்றது!

இலங்கை மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் இணைத்தமை வாடிக்கையாளர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக பெருமளவிலான வாடிக்கையாளர்கள் தமது வைப்புப்பளை விலக்கிகொள்ள ஆரம்பித்துள்ளனர்

இதன் எதிரொலியாக  சீன உரக் கொடுக்கல் வாங்கல்களின் நிதி தொடர்பில் ஆராயுமாறு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

CBEU அனுப்பிய கடிதத்தின் மூலம் இது தெரிவிக்கப்பட்டது. மேலும் அது பற்றிய விவரங்கள் ஊடக அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டன.

மேலும் பொது மக்கள் வங்கியின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் எனவும் இது நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கி தொடர்பில் ஊடகங்கள் ஊடாக தற்போது பரப்பப்படும் தேவையற்ற மற்றும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க நிதியமைச்சர் உடனடியாக தலையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

சீன அரசாங்கத்திற்கு நிதி வழங்கப்படாதது மக்கள் வங்கியின் தவறல்ல என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது