அடுத்து அரிசி விலை எகிறியது!
இலங்கையில் அரிசி விலைகளை மீண்டும் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்க பிரதான அரசி உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா 30 ரூபாவிலும் சம்பா மற்றும் நாடு ஒரு கிலோ கிராம் 10 ரூபாவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்புடன் ஒரு கிலோ கிராம் கீரி சம்பாவின் விலையானது 225 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ கிராம் சம்பாவின் விலை 165 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் நாடு அரிசியின் விலை 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் வெள்ளை மற்றும் சிகப்பு பச்சை அரிசியின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது ஒரு கிலோ கிராம் 110 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அரசாங்கம் அரிசி விலையை நிர்ணயிக்கும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியதை அடுத்து பிரதான அரிசி உற்பத்தியாளர்கள் தற்போது அரிசியின் விலைகளை தீர்மானித்து வருகின்றனர்.