November 22, 2024

மடங்கினர் பங்காளிகள்!

அமெரிக்காவிற்கு தாரை வார்க்கப்படவுள்ள யுகதனவி அனல் மின் நிலையம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் நேற்று (28) பிற்பகல் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி கட்சி தலைவர்கள் மத்தியில் ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கட்சி தலைவர்களின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறித்த சந்திப்பில்   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன,   அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, நாமல் ராஜபக்ஷ மற்றும்  இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, ஜீவன் தொண்டமான்,  பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம்,  பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஏ.எல்.எம்.அதாஉல்லா, டிரான் அலஸ், வீரசுமன வீரசிங்க, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.