März 28, 2025

பங்காளிகள் முறுகல்:இறங்கி வந்தார் கோத்தா!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று நடைபெறவுள்ளது.

மாலை 5.30 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்கவுள்ளார்.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டமைக்கு பங்காளிக்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

இது சம்பந்தமாக ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிட்டன. எனினும், ஜனாதிபதி சந்திப்புக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இதனால் கொதிப்படைந்த பங்காளிக்கட்சிகள், ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் மக்கள் சந்திப்பை நாளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தன. இந்நிலையிலேயே பங்காளிகளை இன்று ஜனாதிபதி அவசரமாக சந்திக்கிறார்.