சோற்றிற்கு சிங்கியடிப்பு:சொகுசு கார்கள் இறக்குமதி!
மக்கள் பட்டியினுடன் வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தீர்வை வரியற்ற வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் சத்தம் சந்தடியின்றி காய் நகர்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும் அத்தகையதொரு எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது ஏற்கனவே வாகனங்கள் இறக்குமதி செய்வதற்காக ஒழுங்குகள் செய்யப்பட்ட போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையின் காரணமாக வாகன இறக்குமதி செய்வதை ஒத்திவைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரினர். இந்த கோரிக்கையே தற்போது மீள்பரிசீலனை செய்யவேண்டிய தருணம் வந்துள்ளதாக கருத்து முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். எனினும் இறக்குமதி செய்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்றார்.
ஆயினும் அரசின் இம்முயற்சிக்கு ஆளும் எதிர்தரப்பு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு ஆதரவை தெரிவித்துள்ளனர்.