März 28, 2025

பங்காளிகள் :தூசுக்கு சமன்!

 

பங்காளிகளை கோத்தபாய துரும்பாக கூட பொருட்படுத்தா நிலையில் தமது கருத்துக்களைக் கேட்கத் தவறியமை தொடர்பில், பங்காளிக் கட்சிகள் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளன .

யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பான கலந்துரையாடலுக்காக அவர்கள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி கோத்தா நிராகரித்தமையே  இதற்கான காரணம்  என தெரியவந்துள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று தெரிவித்த ஜனாபதி, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அல்லது நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் அரசியல் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கலாம் என்று  கடந்த வாரம் தமது பதில் கடிதத்தில் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு அறிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் அலுவலகத்தில் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேற்றிரவு ஒன்று கூடியிருந்தனர்.

இந்நிலையில் மைத்திரி தரப்பின் ஆதுரவுடன் புதிய அரசியல் நகர்வை அவை ஆரம்பித்துள்ளன.