Mai 18, 2024

இலங்கை அரசு பற்றி அக்கறையில்லை:விலையேற்றம்!

இலங்கையில் இரவோடு இரவாக லங்கா ஐ.ஓ.சி’யின் லங்கா ஒட்டோ டீசல் மற்றும் 92 ஒக்டைன் பெற்றோல் என்பன லீற்றர் ஒன்றுக்கு 5 ரூபா வீதம் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை எனவும்,

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் அனுமதியின்றி பேருந்து கட்டணத்தை அதிகரிப்போம்  என  தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு டீசல், பெற்றோலின் விலையினை 5 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி  92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை  லீற்றருக்கு ரூ .162 ஆகவும் ஒரு லீற்றர் டீசல் முதல் 116 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

எனினும் எரிபொருள் விலையை உயர்த்தக்கூடாது என்ற அரசாங்கத்தின் முடிவின் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விலையை அதிகரிக்கவில்லை என   நிதி அமைச்சின் மூத்த செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்