முன்னாள் போராளிகள் இரவு இரவாக வேட்டை!
புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் வீடுகளில் இருந்து தூக்கிச் செல்லப்படுவது தொடர்கின்றது. கடந்த மூன்று மாதங்களுக்குள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் 39 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இரவிரவாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் .சிலர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அச்சுறுத்தப்படுகிறார்கள் எனவும் அம்பலப்படுத்தியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.17 தமிழ்ப் பெண்கள், குழந்தைகளுடன் சிறையில் இருக்கின்றனர் அவர்களைக்கூட பார்க்கமுடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. பிரபாகரனின் புகைப்படத்தை வைத்திருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் திருகோணமலையில் கைது செய்யப்பட்ட இளைஞனை, 3 மாதங்களுக்குப் பின்னரே அவர்களுடைய பெற்றோரால் பார்க்கமுடிந்தது என்றுத் தெரிவித்த அவர், அவ்விளைஞன் விடுதலைப் போராட்டம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.
கொரோனா முடக்கத்தில், கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை, இரவோடு இரவாக வீடுகளுக்குள் புகுந்து தூக்கிச்சென்றுள்ளனர். பலரும்
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் எனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.