November 22, 2024

டக்ளஸ் பாணி அரசியலில் திலீபனும்?

இன்றும் நாளையும் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் அனைத்து திறப்புகளையும், வலயக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் க.திலீபன் தெரிவித்தமை டக்ளஸ் பாணியில் அரசியலென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

புறக்கணிக்கப்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை திறப்புகளை வலயக் கல்வித் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு,  திலீபன் எம்.பி தெரித்திருந்தார்.

அதிபர் – ஆசிரியர்கள் தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை தொழிற்சங்கப் போராட்டம் எனவும் இந்நிலையில், அதிபர்களிடம் திறப்புகளை ஒப்படைக்குமாறு எவரும் கேட்க முடியாது என ஆசிரிய சங்கப்பிரதிநிதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

„வெறுமனே  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கட்டளையிட முடியாது. எனவே, அவருக்கு திறப்பை ஒப்படைக்க கூற எந்த அதிகாரமும் இல்லை“ எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் தேவானந்தா செய்த அரசியலை வவுனியால் முன்னெடுக்க அவர் முற்பட்டுள்ளாராவென்ற கேள்வியும் எழுந்துள்ளது.