கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தால் தலையிடி!
இலங்கையிலுள்ள கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அரசின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி, அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரினால் உயர் நீதிமன்றத்தில் குறித்த அடிப்படை உரிமை மனு இன்று (21) வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோத்தா அரசிற்கு தலையிடியை தரும் விடயமாக கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கிய விவகாரம் மாறியுள்ளது.