அடுத்து ஆமி மாமா வாத்தியாராம்?
இலங்கை அரசு மூடப்பட்ட பாடசாலைகளை 21ம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
எனினும் அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்த கிளிநொச்சி மாவட்ட செயலர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
21ம் திகதி பாடசாலைகள் திறக்க ஆசிரியர்கள் வராவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணியிலமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு குறிப்பிட்டார்.
2 நாட்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களிற்கான விளையாட்டு, கலை பாடங்களை புகட்டக் கூடிய திறமை வாய்ந்த உத்தியோகத்தர்கள் பிரதேச செயலகங்களில் உள்ளனர்.
நீண்ட நாட்கள் இடைவெளியின் பின்னர் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களை அன்புடன் வரவேற்க வேண்டும். அன்று ஆசிரியர்கள் சமூகமளக்காவிடின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பயன்படுத்தி அவர்களிற்கான விளையாட்டு, கலை பாடங்களை கற்பிக்க முடியும்.
அனைத்து பிரதேச செயலாளர்களும் பாடசாலை நடவடிக்கைகளை கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வர் என கலந்துரையாடலின்போது மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்