டக்ளஸில் மனோவுக்கு சந்தேகம்
யுத்தத்தை நாம் விரும்பவில்லை.ஆனால் முன்னராக யுத்தத்தை செய்தவர்களிடம் தர்க்க ரீதியிலான கருத்து இருந்ததை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் மீண்டும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையின் அரசியல்வாதியாக மனோகணேசன் காலத்திற்கேற்பட வடகிழக்கில் தனக்கு ஆட்களை தேர்தல் காலத்தில் இணைப்பதும் பின்னர் கழற்றிவிடுவதையும் தொழிலாக கொண்டுவாழ்ந்துவரும் அரசியல்வாதியாவார்.
முன்னதாக தனக்காக அச்சுறுத்தல் மத்தியில் பணியாற்றிய சண்.குகவரதன் போன்றோரை கோடிக்கணக்கான கடனுடன் கைவிடட மனோ கணேசன் தனது புதிய நண்பர்களது பிறந்தநாளிற்காக யாழ்.வருகை தந்திருந்தார்.
திருநெல்வேலியிலுள்ள விடுதியில் தனக்கும் நேர காலத்துடன் பிறந்த நாள் கொண்டாடிய மனோ இலங்கையின் கடற்றொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தாவை நியமித்ததிலும் சதி உள்ளதா என பரபரப்;பினையும் தோற்றுவித்திருந்தார்.
தமிழக மற்றும் தாயக இரு தமிழர்களும் மோதி விரோத மனத்துடன் வாழ டக்ளசிற்கு அழைப்பு விடுத்தார்களோ தெரியாது. இதனை வெறும் மீனவர்கள் பிரச்சனையாக மட்டும் அல்ல தமிழர்களின் பிரச்சனையாக பார்க்க வேண்டுமெனவும் மனோகணேசன் எனவும் தெரிவித்திருந்தார்.