Mai 13, 2025

அலரிமாளிகையில் சுமங்கலி பூஜை!

இலங்கைப்பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா நடைபெற்றிருந்த நிலையில் தனது மனைவியின் வாழ்விற்காக சுமங்கலி பூசையிலும் பங்கெடுத்திருந்தார்.

பிரதமரும் புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சருமாகிய மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற  நவராத்திரி விழாவின்போதே சுமங்கலி பூஜையும் நடைபெற்றிருந்தது.

எனினும் நவராத்திரி விழாவிற்கென வருகை தந்திருந்த சுப்பிரமணிய சுவாமி விருந்தொன்றில் பங்கெடுத்தமையால் தாமதமாக அலரிமாளிகையை வந்தடைந்துள்ளார்.