März 28, 2025

ஓடு!ஓடு!! தப்பித்து ஓடு!

இலங்கையிலிருந்து ஒரு மில்லியன் சிங்கள இளைஞர்கள் தப்பித்து செல்லவுள்ளதாக எதிர்கட்சிகள் கூறிவருகின்ற நிலையில் இன்று கொழும்பு பாஸ்போர்ட் அலுவலகத்தில் காணப்பட்ட நீண்ட வரிசை அதனை கட்டியம் கூறியுள்ளது.

இதனிடையே வடகிழக்கு தமிழர் தாயகத்திலிருந்து வெளியேறுவதில் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் முனைப்பு காட்டிவருகின்றனர்.

திருகோணமலையிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் திருகோணமலை துறைமுக வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை விட்டு தப்பித்துச்செல்ல முற்பட்டவர்களுள் பெண் ஒருவரும், 4 வயதுடைய அவரது குழந்தையும்; இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கணிசமானவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளென மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

மீண்டும் வடகிழக்கில் அதிகரித்துள்ள இலங்கை படைகளது நெருக்குவாரங்கள் மற்றும் கைதுகளால் தப்பித்தல் முயற்சிகள் முனைப்படைந்துள்ளது.