ஜனாதிபதியாக சவேந்திரசில்வா!
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி நீக்கப்பட்டால் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா ஆட்சி கதிரையேறுவார் என தெரிவித்துள்ளார் பேராசிரியர் அஜந்த பெரேரா .எங்கள் ஜனாதிபதி இராணுவத் தளபதியை மிகவும் நேசிக்கிறார்.
20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து, இந்த நாட்டில் தன் வார்த்தையை சட்டமாக்கும் பயணத்தில், ஜனாதிபதி தம்மை பாதுகாப்பதற்காகவே இராணுவத்தளபதியை மிகவும் நேசிக்கின்றமைக்கு காரணமாக அமைகின்றது.
இப்போது நான் ஒரு விடயத்தை நம்புகிறேன். ஜனாதிபதியைப் பற்றி மக்கள் விரக்தியடையும் நாளில், முதல் ஜனாதிபதி நாற்காலியில் அமர இராணுவத் தளபதி முயற்சிப்பார். இது எனக்கு தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமது எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 1983 ஆம் இடம்பெற்ற கலவரம் அல்லது மோதலின் போது கூட இவ்வளவு பாரிய தொகையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.