November 22, 2024

கோத்தா பின்வாங்கினார்: நாமல் பயணம்!

மோடியின் அழைப்பினை கோத்தபாய புறந்தள்ளிவிட்ட நிலையில் பட்டத்து இளவரசன் செய்தியுடன் இந்தியா செல்லவுள்ளார்.

 விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச 100 இற்கும் மேற்பட்ட பௌத்த தேரர்கள் சகிதம் எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியாவின் குஷி நகரில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விடுத்த அழைப்பின் பிரகாரம்,  விசேட பிரதிநிதியாகவே நாமல் இந்தியா செல்லவுள்ளார்.

குறித்த விமான நிலையம் பெளத்த கலாசாரத்தை விருத்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது என இந்தியத் தரப்பு கூறுகின்றது.

நாமல் குழுவினரின் பயணத்துக்கு இந்தியாவால் விசேட விமான வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரும் நாமலுடன் செல்லவுள்ளனர்.