Mai 12, 2025

அமெரிக்க படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா?

 

மாலைதீவு அருகே உள்ள டிக்கோ கார்சியா தீவில் வைத்;து அமெரிக்க படைகளால் கைதான தமிழர்கள் தொடர்பில் தகவல்கள் இல்லாதுள்ளதாக கூறப்படுகின்றது.அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி படகில் நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் இருந்து 64 பேர் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலைதீவு அருகே சர்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

மாலைதீவு மற்றும் மொரீஷஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் மோசமான வானிலை காரணமாக இவர்கள் சென்ற படகு சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது தொடர்பில் இதுவரை இலங்கை, இந்தியத் தூதரகங்களிற்கு எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.