Mai 12, 2025

வருகிறது மாகாணசபை தேர்தல்!

அடுத்த வருட முதல் காலாண்டில் மாகாணசபை தேர்தல் பழைய விகிதாசார முறையில் நடைபெறுமென தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சர் பசில்   ராஜபக்ச முதன் முறையாக தேர்தல்முறை  தெரிவுக்குழுவிற்கு வந்து இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மாகாணசபை தேர்தல்களை நடத்தவேண்டுமென கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.