விவசாயிகள் படுகொலையை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் கொலை!
இந்தியாவில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய காரினால் மோதிக்கொலையை பதிவு செய்த ஊடகவியலாளர்ர் கொல்லப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி படுகொலை செய்ததை வீடியோ எடுத்த செய்தியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட்டுள்ளதாக செய்தியாளரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் வேளாண்மை சட்டத்திற்கு எதிராக வீதியை மறித்து, போராடிக் கொண்டிருந்தபோது போராட்டக்காரர்களுக்கு இடையில் காரினை செலுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் உள்ளிட்ட 8 பேரை காரினால் மோதி படுகொலை செய்தமை தொடர்பான காணொளி வெளியாகியது.
இந்த நிலையில் விவசாயிகள் மீது கார் மோதி கொல்லப்பட்டதை வீடியோ பதிவு செய்த செய்தியாளர் ராமு காஷ்யப் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ள நிலையில் விசாரணை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அதேவேளை கார் மோதி மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 45 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா வழங்கப்படும் என இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போராட்டக்காரர்கள் மீது காரினை செலுத்தியவர் இந்திய மத்திய அமைச்சர் அஜே மிஷ்ராவின் மகன் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.