ஊசி அட்டை அமுலில் தாமதம்!
இலங்கையில் பொது இடங்களுக்குச் செல்லும் போது கொரோனா தடுப்பூசியின் இரண்டையும் பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படும் அட்டையை பொதுமக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கான முடிவை, மேலும் தாமதப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் பெறப்பட்டதாகக் குறிப்பிடும் தடுப்பூசி அட்டையை, கட்டாயமாக்கப்பட்டு, பரிசோதிக்கும் நடவடிக்கை செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அத்தகைய சட்டத்தை ஒரே நேரத்தில் அமல்படுத்த முடியாது என்று, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்; கூறியுள்ளார்.
இதனையடுத்து ஊசி அட்டை விவகாரம் பிற்போடப்பட்டுள்ளது.