November 22, 2024

சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது தொடக்கம் 19 வயது வரையான நாள்பட்ட நோயுடைய மாதாந்த சிகிச்சை பெறுகின்றவர்கள், உளநலம்பாதிக்கப்பட்டவர்கள், உள நலம் குன்றியவர்களுக்கான  பைஷர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று  முதல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்படுள்ளது  என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் என். சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் மாதாந்த சிகிச்சை,உளநலசிகிச்சைக்கு செல்லும் சிறுவர்கள் குறித்த தடுப்பூசியை தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நாட்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெறுகின்ற சிறுவர்களுக்கான (12 – 19 வயதிற்குட்பட்டவர்கள்) பைஸர் (Pfizer) கொவிட் – 19 தடுப்பூசியேற்றும் தேசிய செயற்திட்டம் இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வே.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட தொற்று நோய் தடுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் பரணீதரன், மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சுகன்யா, சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் வைத்தியர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சுகாதார அமைச்சின் அறிவித்தலுக்கமைய நாட்பட்ட நோய்களுக்காக சிகிச்சை பெற்றுவருகின்ற (கிளினிக்) 12 – 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி (Pfizer) ஏற்றும் விசேட செயற்திட்டமானது இன்று  01.10.2021 வெள்ளிக்கிழமை இலிருந்து பருத்தித்துறை  வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் மேற்கொள்வதற்கான  ஒழுங்கமைப்புக்கள்  செய்யப்பட்டுள்ளன.