முன்னாள் பிரான்ஸ் சார்க்கோசிக்கு ஒருவருட சிறை!
முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசிக்கு 2012 ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில் அதிக செலவு செய்ததற்காக சட்டவிரோத பிரச்சார நிதியுதவி செய்த குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு ஒரு வருட சிறைத்தண்டனை தீர்ப்பை நீதிமன்றம் விதித்தது.
தனி விசாரணையில் அவர் ஊழல் செய்ததாக ஆறு மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு வந்தது.
முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சார்க்கோசிக்கு மின்னணு கண்காணிப்பு காப்பு அணிந்து வீட்டிலேயே தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சார்கோசி தீர்ப்பு அறிவிப்புக்காக பாரிஸ் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தண்டனை அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில், சார்க்கோசியின் வழக்கறிஞர் தியரி ஹெர்சாக், அவர் மேல்முறையீடு செய்வார் என்று கூறினார்.