Mai 12, 2025

வடக்கில் 680 பாடசாலைகள் ஆரம்பம்!

 

வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று வடமாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது.  ஒட்சிமீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களை பெற்று ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

அனைத்து ஒழுங்குகளும் முடிவடையும் நிலையில் உள்ள நிலையில் ஆரம்ப பாடசாலைகளை திடீர் அறிவிப்புடன் ஆரம்பிக்கப்படும்  என்றார்.