November 22, 2024

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம்:மீதியும் பறிபோனது!

இந்தியாவின் அதானி குழுமம் (Adani Group) தனது உள்ளூர் பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (John Keells Holdings PLC) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை  (Sri Lanka Port Authority (SLPA) உடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்ய இன்று (30)  ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இதில் கிட்டத்தட்ட   700 மில்லியன் டொலருக்கான கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது, இதன்மூலம் மேற்கு கொள்கலன் முனையத்தின  51% பங்குகள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும்.

கொழும்பு துறைமுகம் இந்தியாவிற்கு  முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது இந்திய சந்தைக்கு அனுப்பப்படும் சுமார் 40 சதவிகிதம் கொள்கலன் சரக்குகளை கையாளுகிறது.

மேற்கு கொள்கலன் முனையத்தின் செயல்பாடுகள் மேற்கு கொள்கலன் சர்வதேச முனையம் என்ற புதிய கூட்டு நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

51%  மேற்கு கொள்கலன்முனையமானது அதானி குழுமத்துடனும், 34% ஜோன் கீல்ஸுடனும், 15% இலங்கை துறைமுக அதிகார சபையுடனும் இருக்கும்.