Mai 12, 2025

ஊரடங்கு இல்லை:ஆனால் வெளியே செல்லமுடியாது!

இலங்கை முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.

இந்த நிலையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவையை, தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என அவர் அறிவித்துள்ளார்.