தமிழர் தாயகப்பகுதியில் வெளிநாட்டு இராணுவம் – வெளியான படங்கள்
சிறிலங்கா இராணுவத்தினருக்கும் வெளிநாட்டு இராணுவத்தினருக்கும் இடையிலான போர் பயிற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்பயிற்சியானது மட்டக்களப்பு – தொப்பிகலை மலைப்பகுதியில் நடந்து வருகிறது.
நீர்க்காகம் போர்ப் பயிற்சியின் 11ஆம் ஆண்டு பயிற்சிகளே இவ்வாறு கடந்த 22ஆம் திகதி முதல் நடைபெற்றுவருகின்றது.
இந்தப் பயிற்சியானது நாளை 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
இந்த பயிற்சியில் எந்த நாட்டு இராணுவத்தினருடன் இணைந்து பயிற்சினை மேற்கொண்டுள்ளனர் என்ற தகவலை இது வரையில் வெளியிடவில்லை.
எனினும் கடந்த 2017ஆம் ஆண்டு பங்களாதேஸ், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரேசில், சூடான், இஸ்ரேல், ஓமான், துருக்கி, ஈரான், கென்யா மற்றும் ஈராக் ஆகிய நாட்டு இராணுவத்தினர் பயிற்ச்சியில் ஈடுப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.