ஊரடங்கு நீக்கம்:தடை தொடரும்!
இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகள் சகிதம் தளர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது
அதன்பின்னர் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும், இது தொடர்பில் பல தரப்புகளுடனும் இலங்கை சுகாதார அமைச்சு ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்தை ஒக்டோபர் 15 ஆம் திகதியளவிலேயே ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், நிகழ்வுகளை நடத்துதல் உட்பட இதர விடயங்கள் தொடர்பிலும் 15 ஆம் திகதியளவிலேயே தீர்மானம் எட்டப்படவுள்ளது.