முதலாம் திகதி திறப்பு சாத்தியமல்லI
இலங்கையில் உள்நாட்டு சந்தையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க எம். பி தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஒக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ள போதிலும் , அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளுர் சந்தைகளில் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக திட்டமிட்டவாறு முதலாம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் அந்த வகையில் எரிபொருள் கொள்வனவில் நிலவும் தாமதம் காரணமாக ஊரடங்கு மேலும் நீடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.