சதொச மோசடிகள் அம்பலமாகுமா? ஜனாதிபதிக்காக காத்திருக்கும் துஷான் குணவர்தன
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பியதும் அவரைச் சந்தித்து, சதொசவில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலான சாட்சியங்களை கையளிக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சாட்சியங்களை தற்போது சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மோசடி சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வழங்கவுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து தனது நடவடிக்கை முழுமையாக நிறைவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக சமையல் எரிவாயு பிரச்சினை தொடர்பில் சட்டமா அதிபரை சந்தித்து விளக்கமளித்த போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை எதிர்த்திருந்ததையும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.