அரேபிய நாடுகளிற்கு கதவு திறக்கிறது இலங்கை!
இலங்கையில் முதலீடுகளை செய்ய அரேபிய நாடுகளை கோத்தா அரசு அணுக முற்பட்டுள்ளது.
ஏற்கனவே அரச அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் நாபடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரகசிய பேச்சுக்களை நேரடியாக குவைத் சென்று முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே சூரிய சக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் துறைமுக நகரத்துக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு குவைட் முதலீட்டாளர்களுக்கு இலங்கை ஜனாதிபதி அழைப்புவிடுத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் குவைட் நாட்டின் பிரதமர்; சபா அல் – ஹமாட் அல் – சபாக்கும் இடையிலான சந்திப்பொன்று, கடந்த 19ஆம் திகதி முற்பகல், நியூயோர்க் மன்ஹாட்டன் இல் இடம்பெற்றது.
துறைமுக நகரம், சூரிய மற்றும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில், குவைட் அரசாங்கத்தால் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும், குவைட் பிரதமருக்கு ஜனாதிபதி எடுத்துரைத்ததாக ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.