März 28, 2025

இராஜாங்க அமைச்சரின் இல்லத்தில் வெடி பொருட்கள் !

கண்டி பிரதேசத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருடைய வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக பொலிஸ் அவசர பிரிவுக்கு போலியான தகவல் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் தொலைபேசித் தரவுகளை சரிபார்த்த பின்னர், கண்டி பொலிஸ் தலைமையகத்தின் விசேட அதிரடிப்படையினர் இவர்களை கைது செய்தனர்.

கைதான நபர்கள் 32 மற்றும் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.