Mai 13, 2025

அரியாலை பூம்புகாரில் மனைவியால் கணவன் அடித்துக் கொலை!!

அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலை தொடர்பாக இன்று (19) காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.மனைவியால் திருவு பலகை மூலம் அடித்துகொலை செய்யப்பட்டவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டதுடன், சடலம் பிரேத ப‌ரிசோதனை‌க்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று (19) அதிகாலை யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் விசாரணைகள் முன்னெடுத்ததுடன், உடனடியாக குடும்பப் பெண்ணை கைது செய்தனர்.

சம்பவத்தில் துரைராசா செல்வக்குமார் (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தவராவார்.

திருவு பலகையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத்தலைவரின் உடலில் ஐந்திற்கு மேற்பட்ட காயங்கள் காணப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் தடயவியல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.