Mai 12, 2025

பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபத்தின் 2 ஆம் நாள் நிகழ்வுகள்

பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள ஆர்ஜொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவு வணக்கத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று 16.09.2021 வியாழக்கிழமை உணர்வோடு இடம்பெற்றன.

ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காலை 10 மணியளவில் சுடர் ஏற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 12 நாட்களும் குறித்த நினைவேந்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.