தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் “லொகான் ரத்வத்த“
தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் “லொகான் ரத்வத்த“ எதிராக தமிழ் சட்டத்தரணிகள் யாரும் பொலிசாரிடம் ஏன் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை??
பயங்கரவாத சட்டத்தின் கீழ் லொகான் ரத்வத்தையை பொலிசார் ஏன் கைது செய்யமுடியாது??
அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதிகளை சுட்டுக்கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த எதிராக சுமந்திரனோ அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ பொலிசில் ஏன் முறைப்பாடு செய்யவில்லை??
ஐ.தேசிய கட்சியை காப்பாற்றுவதற்காக தலைகீழாக நின்று நீதிமன்றதில் வாதாடிய சுமந்திரன் இந்த அப்பாவி தமிழ் கைதிகளின் பிரச்சையில் தனது சட்ட அறிவை காட்டலாமே??
எல்லா தமிழ் அரசியல்வாதிகளும் சும்மா தாங்களும் இருக்கிறோம் என்ற பெயரில் இந்த பிரச்சனை சம்பந்தமாக அறிக்கை விட்டதோடு சரி.
அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து,
அவர்களில் இருவரை மண்டியிடச் செய்து, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தினார் என்பதனை தன்னால் உறுதிப்படுத்தமுடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
இதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிப்படுத்த முடியுமென்றால் இவர் நேரில் பொலிஸில் சென்று இது சம்பந்தமாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த எதிராக முறைப்பாடு ஒன்றை செய்யலாமே??
தமிழ் மக்களின் பிரச்சைனைகளை கையாள்வதக்காக சட்ட வல்லுனர்கள் குழு ஒன்றை தமிழ் கட்சிகள் இதுவரை உருவாக்கியுள்ளார்களா??
லொஹானுக்கு எதிராக முறைப்பாடுகள் இல்லை! கிடைத்தால் நடவடிக்கைக்கு தயார் என்கிறது பொலிஸ் தலைமையகம் அறித்துள்ளது
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகனுக்குப் பொறுப்பான முன்னாள் இராஜாங்க அமைச்சரான இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான லொஹான் ரத்வத்த தொடர்பில் பொலிஸாருக்கு எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 12 ஆம் திகதி வெலிக்கடை , அநுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தச் சிறைச்சாலைகள் அமைந்துள்ள பொலிஸ் பிரிவுகளில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இராஜாங்க அமைச்சருக்கு எதிராக எந்த முறைப்பாடுகளும் இன்று (15) நண்பகல் 12.00 மணியாகும்போதும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் இடம்பெற்றதாக
கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பில், முறைப்பாடுகள் இன்றி விசாரணைகளை முன்னெடுப்பது சிரமம் எனவும், முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப் பெறின் அம்முறைப்பாட்டுக்கு அமைய தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.