இத்தாலி விருந்து:கிழி கிழியென கிழிப்பு!
இலங்கை மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண அமைச்சர்கள் பரிந்துரைக்க இத்தாலியில் மகிந்த அன் கோ பங்கெடுத்த விருந்து சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
நாட்டு மக்களை இரண்டுவேளை மட்டும் உணவு உண்ண சொல்லிவிட்டு மக்கள் வரிப்பணத்தில் இத்தாலி பயணமாவென கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவிப்புக்கள்; காரணமாக பிரதமரின் இத்தாலி பயணம் முக்கியமானதென பலரும் கருதினர்.ஆனால் வெளிப்படையாக இந்த பயணம் அவ்வளவு இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லையென்பது பின்னர் அம்பலமாகியிருந்தது.
அவர் இந்த சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தார். இது அரசாங்கத்திற்கும் பாதகம். இந்த நேரத்தில் ஆசிரியர் சம்பளம் கேட்பது போன்ற விசயங்கள் சரியானவை அல்ல என்று அரசாங்கம் கொண்டு வரும் விமர்சனத்திற்கு ஏதேனும் செல்லுபடியாகும் தன்மை இருந்தால், இந்த சம்பவம் அதனை கேள்விக்குள்ளாக்குமென முன்னணி சிங்கள ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி கோத்தபாயவின் அமெரிக்க பயணமும் கேலிக்குள்ளாகுமென தெரிவித்துள்ளதுடன் இந்த நேரத்தில், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளினதும்; முன்மாதிரியான நடத்தை அவசியம். இல்லையெனில், அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் எந்த தார்மீக அடித்தளத்தையும் இழப்பதைத் தடுக்காதெனவும் தெரிவித்துள்ளனர்.