Dezember 3, 2024

சத்துருக்கொண்டான் படுகொலைகளின் நினைபு! மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற படுகொலையின் நினைவாக நேற்று (10) அதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தென்னை மற்றும் மஞ்சள் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

பனிச்சையடி, சத்துருக்கொண்டான் கிராமமட்ட விழிப்புக்குழுவின் ஏற்பாட்டில் இந்த மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

பனிச்சையடி, சத்துருக்கொண்டான் கிராமமட்ட விழிப்புக்குழுவின் தலைவி திருமதி ரஜனி பிரகாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் கலந்துகொண்டார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வீடுவீடாக கொண்டு மரக்கன்றுகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற படுகொலையில் சிக்கிய 60 குடும்பங்களின் உறவினர்களுக்கு இந்த மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது, குடும்பத்திற்கு தலா இரண்டு தென்னை மரக்கன்றுகளும் தலா இரண்டு மஞ்சள் மர கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டன.