November 22, 2024

குடும்ப சண்டை உச்சம்:ஆளுநர் வீட்டிற்கு!

ராஜபக்ச குடும்ப சண்டை உச்சம் பெற்றுள்ள நிலையில் ஓய்வு தேடி வெளிநாடுகளிற்கு தப்பிக்க தொடங்கியுள்ளனர்.

ஏற்கனவே மனைவி சகிதம் மகிந்த இத்தாலி சென்றுள்ள நிலையில் அடுத்து கோத்தா மனைவி சகிதம் அமெரிக்காவிலுள்ள மகனிடம் செல்லவுள்ளார்.

இதனிடையே மீண்டும் பஸிலின் கை ஓங்கிவருகின்ற நிலையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து அடுத்த வாரம் தாம் விலகுவதாக பேராசிரியர் லக்ஸ்மன் தெரிவித்துள்ளார்.

பஸில் தரப்பில் நெருக்கடிகளையடுத்தும் கப்ராலை மீண்டும் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்க ஏதுவாகவும் அவர் விரட்டப்பட்டுள்ளார்.

அடுத்த மாதம் எனது 80 ஆவது பிறந்த தினத்தின் பொழுது ஓய்வு பெற தீர்மானித்திருந்தேன். எனினும் கடந்த ஒருவாரத்துக்குள் மன வேதனையை ஏற்படுத்தும் சம்பவங்கள் காரணமாக எனது தீர்மானத்தை 6 வாரங்களுக்குள் உட்படுத்தியுள்ளேன். எனவே எதிர்வரும் 14 ஆம் செவ்வாய்க்கிழமை விலகுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

நான் எனது பொறுப்புக்களை இரவு பகல் பாராது நிறைவேற்றினேன் எனினும் சமூக மற்றும் மனிதாபிமான அழுத்தங்கள் காரணமாக எனது இலக்களை அடைய முடியாமல் போனது. நான் பதவியேற்று 3 மாதங்களில் அதாவது 2020 மார்ச்  மாதத்தில்  இருந்து ஏற்பட்ட கொவிட் தொற்றும் இதில் தாக்கம் செலுத்தியது.

அதேபோன்று மேலும் பல மனிதாபிமான மற்றும் நிறுவனங்கள் சார்ந்த விடயங்களும் இதில் தாக்கம் செலுத்தியது. இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலும் கொள்கை மாற்றங்கள் தொடர்பில் சிந்தித்து செயற்பட்ட போது மன உழைச்சலுக்குள்ளான பல சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே என்னையும் என்னை நேசிப்போரையும் ஆசிர்வதிக்கும் வகையிலேயே நான் இந்த பதவியில் இருந்து விலகிச் செல்கின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் பதவியை ஏற்றுக்கொள்வீர்களா என கேட்கப்பட்டதற்கு?

சர்வதேச நாணய நிதியத்தில் உயர்ந்த சம்பளம் மற்றும் பல வசதிகள் கொண்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் பதவியை அடுத்த ஒருவருடத்துக்கு ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இது எனக்கு கிடைத்த பெரும் பரிசாக இருந்தாலும் நான் அதனை நிராகரித்தேன் . ஓய்வு பெற்றதன் பின்னர் ஓய்வில் இருக்கவேண்டும் என்றே நினைக்கின்றேன் என்றார்.