மகிந்த இத்தாலிக்கு:குடும்ப வைத்தியருக்கு அபாயகட்டம்!
ஐநா அமர்வு எதிர்வரும் திங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று வெள்ளி காலை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் 16 பேர் கொண்ட தூதுக்குழுவும் இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
அவரது பயணம் தொடர்பில் தெற்கில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
முன்னதாக போப் ஆண்டவரையும் மகிந்த சந்திப்பாரென்ற தகவல்கள் வெளியாகியபோதும் ஆயர்கள் எதிர்ப்பினையடுத்து அது தடைப்பட்டிருந்தது.
இதனிடையே மகிந்தவின் குடும்ப ஆயுர்வே வைத்தியர் எலியந்த வைட் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சிகிசிசை பெற்றுவரும் தனியார் வைத்தியசாலையின் பேச்சாளர் கூறினார்.
அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், அங்கு அவருக்கு ஒட்சிஜன் இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது, என்றார்.
இவர் ஒரு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறவில்லை என்று கூறினார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே கொரோனா தடுப்பிற்கு மண்பானை யாகமென அமைச்சர்களை அலைக்கழித்தவர் இவரேயாவார்.