März 28, 2025

தலீபான் அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது – அமெரிக்கா

தலீபான் தலைமையிலான புதிய அரசை அங்கீகரிப்பதில் அமெரிக்கா அவசரம் காட்டாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பெஸ்கி கூறுகையில்,

தலீபான்கள் அரசை அங்கீகரிப்பதில் எந்த அவசரமும் இல்லை. தலீபான்கள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும்.  உலக நாடுகள் பார்த்து கொண்டிருக்கின்றன. அதேபோல் அமெரிக்காவும் தலீபான்கள் நடவடிக்கையை கண்காணிக்கும் என்றார்.